சினோபெக் நிறுவனம் எரி பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது..!
சினோபெக் நிறுவனம் எரி பொருட்களின் விலைகளை 3 ரூபாவினால் குறைத்தள்ளது.
இதன் படி
ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 358 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 414 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 338 ரூபாவாகவும்,
சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 356 ரூபாவாகவும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலையானது 231 ரூபாவாக மூன்று நிறுவனங்களும் நிர்ணயித்துள்ளன.
சினோ பெக் நிறுவனம் சீனாவிற்கு சொந்தமானதாகும் .இதன் முதலாவது எரி பொருள் நிரப்பு நிலையத்தை மத்தேகொட பகுதியில் ஆரம்பித்துள்ளது. மற்றும் 150 எரி பொருள் நிரப்பு நிலையங்களை நாடு முழுவதும் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்,லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் என்பன எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.