விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக வந்த விண்வெளி வீரர்கள்..!
விண்வெளிக்கு செல்கிறோம் பூமியில் வந்து தரையில் கால்கள் பட மட்டும் நம்மலுடைய உயிர் நம்மலுடடைய கையில் இருக்காது.அவ்வளவு பதற்றமாக இருக்கும்.
இந்நிலையில் தான் சர்வசாதாரமாக விண்வெளிக்கு சென்று அங்கு பணிகளை செய்து விட்டு மீண்டும் பூமிக்கு வந்து இருக்கின்றனர் இவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு செல்லும் குழு, 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி நின்று நமது செயற்பாடுகளை மேற்கொள்ளும். இறுதியாக கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து குழு-7 உடன் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இப்புதிய குழு சென்றதால் ஏற்கனவே இருந்த குழு-6 மீண்டும் வெற்றிகரமாக பூமிக்கு வந்துள்ளனர்.
அமெரிக்கா,ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்தாபித்திருக்கின்றன.இதில் அமெரிக்க ,ரஷ்ய விஞ்ஞானிகள் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.