குதிக்கால் வலிக்கான நிவாரணி…!
இன்றைய கால கட்டத்தில் அதிகளவான மக்கள் குதிக்கால் வலியினால் அதிகமாக துன்பப்படுகிறார்கள். தினம் தோறும மருந்தகங்களை நோக்கி சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.இதற்கான சில மருத்துவ குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு வாணலியில் அரிசி தவிடு மற்றும் உப்பு சேர்த்து வறுத்து எடுத்து பருத்தி துணியினுள் வைத்து பொட்டனம் போல கட்டி குதி கால் பகுயில் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குதிகால் வலியினை குறைக்காலாம்.
மற்றும் நொச்சி இலை ,நல்ல இணைத்து சூடுப்படுத்தி இரவில் தூங்க செல்லும் போது காலில் பூசிக்கொண்டு தூங்கலாம் இதன் மூலமும் குதிக்கால்வலி குணம் பெறும்.
மற்றும் உடல் எடையினை குறைப்பதற்கான உடற் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பாரம் குறைந்து குதிகால் வலி குறைவடையும்.
மற்றும் வில்வம் காயினை நெருப்பில் சுட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுப்பதன் மூலமும் குதிக்கால வலி குறைவடையும்.
இவ்வாறன முயற்சிகளை செய்து பாருங்கள். இலகுவில் நீங்கள் ஆரோக்கியமான மக்களாக இருப்பீர்கள்.
எழுதுவது ஆர்.ஜே உமாதேவி
இராமநாத புரம்