மண்ணின் மகத்துவம்..!
மண்
உணர்வுகளின்
சங்கமம்.
உயிர்களின்
புகலிடம்.
பிறக்க
வளர்க்க
மரிக்க
உண்டான
வாழ்வியல்
திறவுகோல்.
மண்
உயிர்வாழிகளின்
உணவு
கேந்திரம்.
மண்ணில்
விதைத்த
விதை
ஒன்று
நூறாகாமல்
இருந்தால்
இங்கு
யார்
விதைப்பர்.
அறிவியல்
மண்
தத்துவத்தை
சரிவர
புரியாமல்
அறுவடை
தரும்
உயிரற்ற
பொருள்
என
நினைக்கிறது.
மண்
வளத்தின்
மழையின்
மலையின்
பஞ்சபூதங்களின்
உலோகங்களின்
உப்புகளின்
கனிம
கனிமங்களின்
அநேக
சுரங்கங்களின்
ஜீவியம்.
ஒன்றையும்
உருவாக்க
வழியில்லாமல்
சுரண்டி
தின்னும்
மனிதம்
சிந்தனைகளின்
பிரதிநிதியாம்.
மானங்கெட்ட
மனிதா!
நாளை
உன்னை
மக்க
செய்து
ஏதோவோர்
விலை
அதிகமான
உலோகமாக
மண்
மாற்றிவிட்டால்
மண்ணிற்கு ள்
மனிதனை
புதைக்க
வழிதேடும்
உனது
மூளை
வியாபாரம்.
மண்
திரு
நிறைந்தது.
திருமண்
திருநீறு
உன்னை
புதைத்தால்
திருமண்.
உன்னை
எரித்தால்
திருநீறு.
ஆனால்
நீ
தான்
வாழும்போது
சாக
மாட்டோம்
என்ற
நினைவுடன்
வாழ்கின்றாயோ?
மண்
விசேஷமானது.
மண்
உன்
தாய்நாடு.
அந்த
மண்ணை
நெற்றியில்
ஒற்றிகொள்.
மண்
உன்
அடையாளம்.
பாக்கியம்
உள்ளவர்கள்
தாங்கள்
வாழ்விடத்தின்
சிறு
மண்ணை
தனது
சட்டசபையில்
சுமக்கின்றார்கள்.
மண்
மழைக்காலத்தின்
வாசனை.
அந்த
மண்வாசனையின்
மகிமையில்
உயிர்ப்பின்
செழிப்பின்
களிப்பின்
தத்துவம்
அறிய
வாழ்த்துகள்.
மண்
நில தத்துவத்தின்
ஓங்கார
உருவம்
அருவம்
அருவுருவம்
எல்லாம்.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை.
9842131985