யோகன்-39 ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா…!
விண்வெளி துறையில் பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தடத்தை பதிக்க துடிக்கின்றன.
இந்த வகையில் அமெரிக்கா,ரஷ்யா,இந்தியா.சீனா என பல நாடுகள் போட்டியிட்டு கொண்டு இருக்கின்றன.
இந்த வரிசையில் சீனாவானது நேற்று மற்றுமொரு ரிமோட் சென்சிங் செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தியுள்ளது.
சீன விண்வெளி ஆய்வு நிலையமானது யோகன்39 என்ற தொலையுணர்வு செயற்கை கோளை ஜிசாங் செயற்கை கோள் ஏவு தளத்தில் இருந்து நேற்றைய தினம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இச் செயற்கை கோளானது திட்ட மிட்ட சுற்றுவட்டப்பாதையில நுளைந்துள்ளதாகவும் அங்கிருந்து அதி நவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.