வெற்றிகரமாக 22 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்..!
விண்வெளித்துறையில் பல நாடுகள் தங்களை முதன்மை படுத்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றன.
அதனால் ஒவ்வொரு நாடும் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்பேஷ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங் என்ற திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு முதல் செயற்படுத்திவருகின்றது.
இந்நிலையில் இணைய சேவைக்காக 22 செயற்கை கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-09 ரொக்கெட் மூலம் அனுப்பியுள்ளது.இவை புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக ஸபேஷ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பேஷ் எக்ஸ் நிறுவனமானது பிரபல கோடிஸ்வரரான எலான் மஸ்க்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.