மழையினால் பலர் இடம் பெயர்வு..!
மண்சரி நிலவும் அபாயம் ஏற்படலாம் என்ற நிலையில் மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் 244 குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துறையின் பெயரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொஸ்லந்த தேயிலை தொழிற்சாலையில் மீரிய பெத்தவை சேர்ந்த 144 குடுமப்ஙகளும்,மல்வண்ண தேயிலை தொழிற்சாலையில் 23 குடும்பங்களும்,தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றும் பல இடங்களில் மக்களின் நலன் கருதி தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான முகாம்களில் மொத்தமாக 768 பேர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை மலையகத்தின் பல பகுதிகளில் அதிகளவான மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.