ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை 8.00மணியிளவில் ஹெரத் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஹெரத் தலைநகரிலிருந்து 34 கிலோமீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.3ஆக பதிவாகியுள்ளது.இதே வேளை பூமிக்கு அடியில் 8 கி.மீ அளவில் இந்நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந் நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கி ஒருவர் மூச்சி தினரி இறந்துள்ளார்.மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாகவும் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதே வேளை பலர் காயத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைகாலத்தில் ஆப்கானிஸ்தானில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.