பப்புவா நியுகினியில் நிலநடுக்கம்..!

பப்புவா நியுகினியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.பப்புவா நியுகினியின் வடக்கு கடற்கரையிலே குறிப்பிட்ட நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ரிச்டர் அளவில் 6.05 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வெகாக் நகரத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கும் கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நில நடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இந் நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் இல்லை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையமும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *