நிராதரவு..!
நிராதரவு….. ❗
நீயும்
நானும்
கலியாணத்தண்டு
கைச்சாத்திட்டோம்
நிரந்தர உறவுக்கான
உடன் படிக்கயில்…❗
ஊறார் முன்னிலையில்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
உறவுக்குள் ஓருவருக்கொருவர்
ஓத்தாஸை என்று
உளமாற ஒப்பு கொண்டோம்❗
ஊடு மாறிப் போனப்பவே
உள்ளென்று வச்சு
புறமொன்று பேசி
உதாசீனம் செய்தாய்
உடன்படிக்கை ஒனக்கு மட்டும்
காலாவதியாகியது
காரணம்
என் தல எழுத்து என்றானது. ❗
ஆயிரம் குத்தச் சாட்டு
அடிக்கிட்டே போனாய்
கேக்கல பாக்கல
ஆக்கல அவிக்கல
துணிகூட தொவைக்கல
அது வரைக்கும் பொறுத்துக்குவ❗
அடுத்து ஒண்டு கேட்டா பாரு
அதுதா ஆரல மனசு
எவன் பிள்ளைக்கோ
எதுக்கு என் பேர் மொத எழுத்தா ❓
எவ்வளவு எடுத்துச் சொன்னேன்
என் தாய்மையின்
தூய்மையை புரிய வைக்க
புரிந்தும் புரியாமல்
புதுசு புதுசா கதை சொன்னா
காரணமே இல்லாமல் கை வச்சா
கைக்குழந்தை என்னோடு
கால் வைத்து கஞ்சிக்கும்
வக்கில்லை
காரியத்த முடிச்சி ட்டு
கண்டபடி திட்டிட்டு
கண்ணுல படாம
காத்த மறஞ்சுட்டா
கதறியலும்
கைக்குழந்த என் முகத்தை பார்க்குறப்போ
பெண்ணா பிறந்து விட்டேன்
உன் நிலை தான். தாயே…
நாளை எண்ணிலையோ
என்றுபிள்ளமனம் ஏங்கிடுமோ
என்ற எண்ணம் எனக்குள்ளே தோண்டிடுதே ❗
அ. அ. நவாஸ்
வவுனியா.