சேலம் எனும் பசுஞ்சோலை..!
சேலம் எனும் பசுஞ்சோலை
நாற்திசையும் மலைகளாய்
நறுமணமே தென்றலாய் !
நீராடும் பூமியாய்
நிறமெல்லாம் பசுமையாய் !
படைப்புகளின் புகலிடமாய்
பிரம்மனுக்கே பொறாமையாய் !
மேதினியில் மேவுகின்ற
பெருமைமிகு நகரமிது ! – இங்கே
வானும் மண்ணும்
பொய்யாது கிடக்கும் !
ஆறுகளும் ஏரிகளும்
கூட்டணியில் மிதக்கும் !
தென்னையும் கமுகும்
பனையும் வாழையும்
விண்ணோடுப் பேசி
உறவினைக் கூட்டும் !
மலை வளர் பலாவோ
மனதினில் உலா வரும் !
மாவின் சுவையோ
நாவினைக் கவ்வி
நானிலம் எங்கும்
சேலம் சேலமெனக் கூவும் !
இரும்பும் கரும்பும்
இதிகாசம் படைக்கும் !
குளம்பியும் மிளகும்
கும்மாளம் கொட்டும் !
பருத்தியும் பட்டும்
பட்டாடையாய் மலரும் !
மலர்களின் களஞ்சியமாய்
மாநகர்த் திகழும் !
ஆலயங்கள் அணிவகுத்து
ஆன்மாவைக் காத்திடும் !
ஈரத்தின் தன்மையில்
மாந்தர்தம் மனம் போல
மண்ணும் குளிரும் !
வாழும் போதே சுவர்க்கத்தை
காட்டுகின்ற பூமியை
காண்போர் விரைத்திருடுக
காண்போரில் கலந்திடுக !
சேலம் தினத்தில்…
சேலத்து மண் எடுத்து
முத்தம் ஒன்றை தந்திடுக !
மணம் வீசும் பூமியில்
மனம் தந்து…
ஹேமா ஹைதராபாத்