இவர்கள் இருக்குமிடம் மாளிகை தான்..!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *உலக குழந்கைள் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
குழைந்தைகள்_தினம்
இந்த உலகில்
யாரும் ஏழை இல்லை
ஒரு சிலரைத் தவிர…
ஆம்….!
எல்லோருக்கும்
இறைவன்
“குழந்தை செல்வத்தைக்”
கொடுத்திருக்கிறான்…..
குழந்தைகள்
வீட்டுக்குள்ளே
விளையாடும் தெய்வங்கள்….
தவம் செய்யாமலேயே
கிடைத்த வரங்கள் …..
நரகமாய்
இருக்கும் இடங்கள் கூட
இவர்கள் இருந்தால்
சொர்க்கமாகுமே…..!
பாலைவனமாய்
இருக்கும் வாழ்க்கைக்கு கூட
இவர்கள் வந்தால்
சோலைவனமாகுமே….!
இவர்கள் கைப்பட்டால்
மேனி எங்கும்
பூ பூக்குமே…!
குரல் கேட்டால்
செவி எங்கும்
தேன் சொட்டுமே ……!
தொட்டு தூக்கையிலே
தீராத கவலைகள்
தீர்ந்திடுமே..!
அள்ளி எடுத்து
அணைக்கியிலே
வராத மகிழ்ச்சி
வந்திடுமே ……..!
கட்டி அணைத்து
முத்தம் கொடுக்கையிலே
எந்தக் கல்நெஞ்சமும்
கரைந்திடுமே…..!
கள்ளமில்லாமல்
சிரிக்கையிலே
எந்த முள் முகமும்
மலர்ந்திடுமே…….!
குழந்தை இருந்துவிட்டால்
மண்குடிசையும்
மாளிகை தான்……
குழந்தை இல்லாவிட்டால்
மாளிகையும்
மயானம் தான்…….
வாழ்வதற்கு
“பொருள்” தர
“பணத்தால்” முடியும்….. !
ஆனால்
வாழ்க்கைக்கு
“பொருள்” தர
“குழந்தைகளால்” மட்டுமே
முடியும் ……!
கொஞ்சி கொஞ்சி
குழந்தையிடம்
பேசிக்கொண்டிருந்தால்
கொடிய பசியும்
மறந்திடும் அல்லவா………!
ஓடி ஓடி
குழந்தைகளோடு
விளையாடிக் கொண்டிருந்தால்
நெடிய உறக்கமும்
பறந்திடும் அல்லவா……….!
வளமான வாழ்க்கை
இருந்தாலும்
வாரிசு இல்லை என்றால்
வாழ்ந்து என்ன லாபம்….?
வறுமையோடு
வாழ்க்கை இருந்தாலும்
வாரிசு இருந்து விட்டால்
வாழ்க்கையில் என்ன சோகம்…? *குழந்தைகள் தின* *நல்வாழ்த்துக்கள்*!! *கவிதை ரசிகன் குமரேசன்*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸