ஒரு நொடி இவ்வளவு பொக்கிஷமா..?

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஒரு நொடி…

🌹ஒருநொடியில் பெரிதாய் என்னவாகிடுமென கேட்கிறாய்..

ஒரு நொடி என்பது அத்தனை அலட்சியமா..?

ஒரு நொடிப் புன்னகை ஒரு நாளையே புத்துணர்வாக்கிடக்கூடும்.

ஒரு நொடி மன்னிப்பு ஒருவர் வாழ்வையே புதிதாக்கிடக்கூடும்..

ஒரு நொடி சந்தேகம் ஒரு பேரன்பை சட்டென களங்கப்படுத்திடக்கூடும்..

ஒரு நொடி உறவுகள் தேவை என
நினைத்தால் வார்த்தைகளில் கவனம் வரும்..

ஒரு நொடியில் தவறவிட்ட வார்த்தை வாழ்நாள் முழுதும் வலி தரக்கூடும்..

ஒரு நொடி என்பது அத்தனை சாதாரணமா..?

பிரசவ நேரத்தில்
ஒரு நொடி என்பது எத்தனை வலுமிக்கதென்பதை..

மரணத்தின் இறுதி நிமிடங்களில்
ஒரு நொடி என்பது எத்தனை விலைமதிப்பற்றதென்பதை..

ஓட்டப்பந்தய வீரனொருவனின்
ஒரு நொடி என்பது எத்தனை பெருமதிப்பானதென்பதை….

முறிந்த உறவொன்றின்
எதிர்பாரா சந்திப்பில்
ஒரு நொடி என்பது எத்தனை உணர்வுகளின் கலவையென்பதை..

ஒரு நொடி தானே.. என எத்தனை எத்தனை நொடிகளைதான் அலட்சியமாய் தவறவிடுவது..?

மறு நொடியென்பது நிச்சயமில்லா வாழ்விதில்
ஒவ்வொரு நொடியும் ஈடில்லாப் பொக்கிஷமே..

இனி..
இப்போதே..
இந்த நொடியினை மிச்சமில்லாது கொண்டாடித்தீர்த்திடலாம்….

பா. ஸ்ரீனிவாசன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *