மண்ணின் மகிமை…!
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
மண் வளப்
பாதுகாப்பு தினம்
சிறப்பு கவிதை
படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
பெண்ணும்
மண்ணும் ஒன்றே !
பெண் நலமோடு
இல்லை என்றால்
உயிர் விளையாது……
மண் வளமோடு
இல்லை என்றால்
பயிர் விளையாது……
மனிதர்கள்
வளமோடு வாழ மண்வளத்தை
கெடுக்கின்றனர்…
அறிவியல் வளர்ச்சி
என்ற பெயரில்
மண்ணி்ன்
ஆரோகியத்தை
தடுக்கின்றனர்…….
ஆகா…|
என்ன ஒருசாதனை !!
இன்றைய
பூச்சிக்கொல்லி மருந்துகள்
பயிர்களில் உள்ள
புழு பூச்சிகளை மட்டுமல்ல….
அப்பயிர்களில் விளையும்
உணவு பொருள்களை
உண்ணும் மனிதர்களையும்
உடனே கொன்று விடுகிறதே….!!
மண்ணும்
பெண்ணும் ஒன்றென்று சொன்னதால்தான் என்னவோ? மண்ணை
மலடாக்குவதிலேயே
குறியாக இருக்கின்றார்களோ…?
இரசாயன உரங்களை
பயன்படுத்துவதால்
பயிர்கள் பணமாகிறது….
மண் என்னவோ
பிணமாகிறது…….!!
“வாய் சண்டையில்
மண்ணாய் போக” என்று
சபிக்கும்போதே தெரிகிறது….
மக்கள்
“மண்ணின்
மகத்துவத்தை
எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள்” என்று
“பொன் காசு” பற்றி
தெரிந்த அளவுக்கு
நம் மக்களுக்கு
“மண் மாசு” பற்றி
தெரியவில்லை…..
இல்லையெனில்
கழிவுகளை
கண்ட இடங்களில்
எறிவார்களா………..?
அற்பமான படைப்பு என்று
சொல்லும் மண்புழுவோ
மண்வளத்தை
மேம்படுத்துகிறது…
அற்புதமான படைப்பு என்று
சொல்லும் மனிதர்களோ
மரங்களை வெட்டி
மண்ணரிப்பு
ஏற்படுத்துகின்றனர்….
ஓ ……!! புழுவுக்கு
வாய் இல்லை……
மண்ணில்லை என்றால்
தாவரங்களும்
விலங்குகளும் இல்லை….
தாவரங்களும்
விலங்குகளும்
இல்லை என்றால்
மனிதனே! நீ இல்லை….
“வைரமணி”
விலை மிக்கது என்கிறாய்
எங்கே ?
அதிலிருந்து
ஒரு “நெல்மணி”யை
விளைவித்துக்
காட்டுப் பார்க்கலாம் …..!!
“பணம்
பத்தும் செய்யும்” என்கிறாய்….
பத்து வேண்டாம்
ஒன்று செய்யச் சொல்….
“ஒரு புழுவை”
உருவாக்கிக் காட்டுச் சொல்
பார்க்கலாம்….
செயற்கை உரமிட்டு
மண்ணின்
வளத்தைக் கெடுக்காமல்
இயற்கை உரமிட்டு
வளத்தோடு வை….
ஏனெனில்….?
நிச்சயம்
நீ ஒரு நாள்
அந்த மண்ணாகத்தான்
போகிறாய்……
மண் உன் காலடியில்
இருக்கிறது என்பதற்காக.
அலட்சியம் செய்யாதே…!!
நாளை…..
நியே !
அதனடியில் தான்!
போகப்போகிறாய்……
இன்று…..
நீயாவது
மண்ணில்
விளைவதைத் தான்
தின்கிறாய்….
நாளை……..
உன்னையே
தின்னப்போது
அந்த மண்தான்…..!!! *கவிதை ரசிகன் குமரேசன்*
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴