எதற்காக கவலை கொள்ள வேண்டும்…?

கவலை

என்ற

வலையில்

பிடிபடும்

மனிதர்கள்.

கவலையின்

காரணம்

கேட்டேன்?

வாழ்வே

கவலை

என்றான்.

இருப்பிலும்

இல்லாமையிலும்

தவிப்பிலும்

இன்புறுதலிலும்

கவலை

கண்டேன்.

சுகத்தில்

கவலையின்

ரேகைகள்

கண்டேன்.

வினவினேன்?

நாளைக்கு

இதே

போல்

கிடைக்குமா?

என்பதின்

சந்தேக

கவலை.

பிறப்பு

கல்வி

வாலிபம்

நட்பு

காதல்

திருமணம்

வேலை

மனைவி

குழந்தைகள்

வளர்ப்பு

மருத்துவம்

உறவுகள்

நோய்

முதுமை

நேசிப்பு

பிராத்தனை

கடவுள்

கவிதை

சாவு

அனைத்தும்

கவலையில்

துவைத்த

புத்தாடைகளே!

ஏன்

என்று

கேட்டேன்?

உன்னால்

தனிமையாக

சுகமோ!

கவலையோ!

பட

இயலாத

வஸ்து

நீ.

ஆசை

எண்ணத்தில்

ஊடுருவி

துணைக்கு

நட்பு

காதல்

திருமணம்

சுற்றம்

செல்வம்

காமம்

மகிழ்ச்சி

குடி

போதை

ஆரவாரம்

பகட்டு

பதவி

செருக்கு

ஆணவம்

படைபலம்

கல்வி செருக்கு

அகங்காரம்

தப்பெண்ணம்

இவற்றில்

எல்லாம்

அறம்

ஒழுக்கம்

கற்பு

நம்பிக்கை

மடை

மாற்றி

சாகிறது.

கவலை

ஒற்றை

வழியல்ல!

வரியல்ல

அது

உலகை

நிலைகுலைய

செய்யும்

பேராயுதம்.

கவலை

தவிர்க்க

எந்த

வஸ்துவாலும்

கட்டப்படாத

தெளிவு

மட்டுமே!

எளிமையாக

கடந்து

செல்.

உனக்கு

முன்பும்

பின்பும்

எவனும்

உலகை

சுமக்க

போவதில்லை.

உனக்காக

யாருக்காக

கவலைப்படாதே!

நடப்பது

நடக்க

இருப்பது

மனித

திட்டமிடல்

என்றால்

அது

விஞ்ஞானம்

மெய்ஞானம்

இரண்டும்

அழியும்.

இறையின்

அனுமதியில்

சில

நாள்

இரவு

பகல்

பயணம்.

இரவில்

முடங்கு

உறங்கு.

பகலில்

வியர்வை

சிந்து.

உழை

உண்

உழைப்பின்

கூலியை.

பிறன்

உழைப்பு

உதிரம்

உண்ணாதே.

அது

பதவி

அரசியல்

வியாபாரம்

மருத்துவம்

கல்வி

எது

என்றாலும்!

சாமானியன்

உதிரம்

உன்

சரித்திரத்தை

புரட்டி

போடும்.

கவலை

காணாத

பயணம்

கானல்நீரே!

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *