தாமரை வடிவிலான செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது சீனா..!
விண்ணில் தமது தடத்தினை பதிக்க வேண்டும் என பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் சீனாவானது தாமரை வடிவிலான வானியல் செயற்கை கோளை சீனா அனுப்பியுள்ளது.
பிரபஞ்சத்தில் நிகழும் மர்மமான நிலையற்ற நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக குறித்த செயற்கை கோளை சீனாவானது அனுப்பியுள்ளது.
ஐன்ஸ்டீன் புரோப் (EP)என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.லோங் மார்ச்-02c என்ற ரொக்கெட்னின் மூலம் தென் மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஜிசாங் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்றைய தினம் ஏவப்பட்டது.
இந்த செயற்கை கோளானது 1.45 தொண் எடை கொண்டது .மலர்ந்த தாமரை வடிவம் கொண்டது.இதில் 12 இதழ்கள் ,02 மகரந்த தண்டுகள் போன்று அமைக்கப்பட்டுள்ளது.12 இதழ்களும் நீண்ட தொலைவை படம்பிடித்து காட்டும் எக்ஸ்ரே தொலை நோக்கிகள் உள்ளன.
இந்த தொலை நோக்கிகள் விண்வெளி கண்காணிப்பு அமைப்பை உருவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.