நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது SLIM…!
நிலவில் தங்களது தடத்தினை ஆழமாக பதித்திட பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் ஜப்பானும் நிலவில் தனது வெற்றிகரமாக தடத்தினை பதித்துள்ளது. அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இந்தியா ஆகிய நாடுகளை தொடர்ந்து 5வது நாடாக ஜப்பானும் இணைந்துக்கொண்டுள்ளது.
நிலவினை ஆய்வு செய்வதற்காக SLIM என்ற ஸ்மார்ட் லேண்டர் இன்றைய தினம் 20 ம் திகதி மதியம் 12.20 மணியளவில் நிலவில் தரையிறங்கியதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA தெரிவித்துள்ளது.
தரையிறங்கிய பின் விண்கலங்களுடனான தொடர்பு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதன் சக்தி குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இன்னும் சூரிய மின்கலங்கள் சக்தியை உருவாக்க வில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை சந்திரனில் தற்போது குளிர்ந்த காலநிலை காணப்படுவதனால் எவ்வாறான நிலையை SLIM சந்திக்கும் என்று தெரிவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
எனினும் சூரிய கோணம் மாறுவதால் மீண்டும் மின்கலம் சார்ஜ் செய்துக்கொள்ளும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.