வெப்பமான கால நிலை தொடருமா?
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று 26ம் திகதி குருணாகல் மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை அதிக வெப்ப நிலை காணப்படுவதால் அதிகளவான நீரினை பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.