மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் பதிவு..!

மெக்வாரி தீவுப்பகுதியில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் டஸ்மேனியா மாகாணத்தின் ஒரு பகுதியாக காணப்படும் மெக்வாரி தீவுப்பகுதியிலே குறிப்பிட்ட நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது நியுசிலாந்து அந்தாடிக்கா விற்கு இடையில் தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.

இன்று காலை 5.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது தரை பகுதியில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *