கடுமையான வெயிலால் மின்சார தடை ஏற்படுமா?
நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70 வீதமாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரம தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70 வீதமாக குறைவடைந்துள்ள போதிலும் மின்சார உற்பத்தி தொடரும்.
அடுத்த மழைக்காலத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 20 வீதத்தை எட்டும் வரை மின்சார உற்பத்தியை தொடர முடியும்.
தற்போதைய மின் உற்பத்தியில் எந்த பிரச்சனையும் இல்லை, நீர் ஆதாரம் மற்றும் பிற ஆதாரங்களை நாங்கள் நிர்வகிக்கிறோம்.
உலக சந்தையில் நிலக்கரி விலை குறைந்துள்ளது, எனவே தொடர்ந்து மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே வேளை இன்றைய தினம் கடுமையான வெப்பம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.