வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
இன்று காலை வடக்கொரியாவானது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.
இன்று காலை 7.44 மணியளவில் இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி சோதனை நடத்திய நிலையில்,37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, தென்கொரியா,ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்பினை வெளியிட்டு வரும் வேளையில் இந்த சோதனை நடவடிக்கை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.