இஸ்ரேலின் தாக்குதலில் 70 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான தாக்குதலை நடாத்தி வருகிறது.

இதன் போது 70 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டேர் அல்பலாஹ் நகரின் ஜவைதா பகுதியில் அமைந்துள்ள ஒரு அகதி முகாமை குறிவைத்து குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போரில் பாலஸ்தீனத்தில் 28900 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *