மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா..?
இன்றைய தினம் சர்வதேச மகிழ்ச்சி தினம். இதன் அடிப்படையில ஐ.நா சபையானது மகிழ்ச்சியாக வாழும் மக்கள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்றை மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் பின்லாந்து ஏழாவது ஆண்டாகவும் மகிழ்ச்சியான நாடாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.
பின்லாந்தில் அமைந்துள்ள ஹெல்சின்கி பல்கலை கழகத்தின் மகிழ்ச்சி ஆராய்ச்சியாளரான ஜெனிபர் டி பாவ்லா ,இயற்கையுடன் நெருங்கிய தொடர்பு ,மற்றும் ஆரோக்கியமான வேலை , வாழ்க்கை சமநிலை ஆகியன அங்கு வாழும் மக்களின் திருப்பதிக்கு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உலகில் பிறந்த அனைவருமே மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும் .ஆகவே கவலைகளுக்கு முதலிடம் கொடுக்காமல் மகிழ்ச்சிக்கு முதலிடம் கொடுக்கவேண்டும்.