இராணுவ உளவு செயற்கை கோளை செலுத்தியது தென்கொரியா..!
வட கொரியா தென் கொரியா என்பன கொரிய தீபகற்பத்தில் பனிப்போர் செய்துக்கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் தென்கொரியாவானது அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ராணுவ உளவு செயற்கை கோளை விண்ணில் செலுத்தி பரிசோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.
உளவு செயற்கை கோளானது வட்டப்பாதைக்குள் நுளைந்துள்ளது.இதன் பின. ரொக்கெட்டில் இருந்து பிரிந்து கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே வேளை 2025 ற்குள் 5 செயற்கை கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.இதற்காக ஸ்பேஷ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதே வேளை அடுத்த வாரம் அளவில் வடகொரியாவும் செயற்கை கோள் ஒன்றை செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை செயற்கை கோளை பரிசோதித்து அதனை வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய உலகின் 10 வது நாடாக தென்கொரியா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.