அன்பிலே கரைந்த அன்பு இப்படி தான் இருக்குமா..?


( காதலின் சின்னம் )


காதலின்
சின்னமெது …
பேரன்பு …

ஆண்டாளின்
காதலைப் போல் …
உள்ளம் உருகி …
ஊன் உருகி …
அன்பிலே அன்பாய்
கரைந்து போகும் …

காதலுக்கு …
சின்னமெதற்கு …
காதலுக்கு
பேரன்பே சின்னம் …

அன்பில் கரைந்த
நெஞ்சம்
அகிலத்தையே
நேசிக்கும் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *