இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணத்தை கண்டு ரசித்த அமெரிக்கர்கள்..!
இந்த ஆண்டின் முதலாவது சூரியகிரகணம் நேற்று நிகழந்தது.இதனை பெரும்பாலும் வட அமெரிக்க மக்கள் அனைவரும் பார்த்து ரசித்தனர்.
சூரிய கிரகணம் ஆனது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவானது பயணிக்கும் நிலவின் நிழலானது பூமியில் தென்படும்.
நேற்று நடைப்பெற்ற இந்த அபூர்வ சூரியகிரகணமானது ஜோதிட ரீதியில் 500 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டதாகும்.
மெக்ஷிகோ,அமெரிக்கா,கனடா 185 கி.மீ நீளம் முழுமையாக வானம் இருளில் மூழ்கியது.இதனை பல்லாயிரகணக்கான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். அமெரிக்காவின் 18 மாகாணங்களில் இதனை காணகிடைத்தது.
முதன் முதலில் மெக்ஷிகோவின் பசுபிக் கடற்பரப்பில் மு.ப 11.07 க்கு அழங்கரித்தது.
இந்த சூரியகிரகணத்தினை பலரும் கண்டு ரசித்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
இதே வேளை இதனை பல்வேறு முறைகளில் நாசா அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.