இப்படியும் ஓர் நிலவு..!
நண்பர்களே
கைக்குழந்தைக்கு ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் எப்படி இருக்கிறது என்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்….
🪷🥀🪷🥀🪷🥀🪷🥀🪷🥀🪷
கைக்குழந்தைக்கு
ஒரு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🪷🥀🥀🪷🥀🪷🥀🪷🥀🪷🥀
கை கால்
முளைத்திருக்கும்
“ஒரு நிலவோ….?”
கண்சிமிட்டி
புன்னகை செய்யும்
“ஒரு கவிதையோ….?”
கைக்குழந்தையிடம்
அழகாகத் தான் இருக்கிறது
“நிர்வாணம் கூட…..”
பால்குடித்த
குழந்தையின் மீது வீசுகிறது
“அன்னையின் வாசம்….”
கைக்குழந்தை
ரசிக்க வைத்து விடுகிறது
“உறக்கத்தையும் கூட….. “
“சிரிக்கும்” போது
எல்லோரும்
அழகாக இருப்பார்கள்….
கைக்குழந்தை
அழகாக இருக்கும்
“அழும்” போது கூட….
இவர்களுடைய
“தாய்மொழி”
எதுவாக இருந்தாலும்….
“சுயமொழி”
அழுகை தான்…..
ராமர் தொட்டு
அகலிகை
“உயிர்த்தெழுந்தாள்….”
கைக்குழந்தை கைப்பட்டால்
அந்த ராமரும்
“மெய்மறந்து விடுவார்….. !”
தொட்டிலில்
ஆடும் போதோ “தீபங்கள்….!”
பாயில்
படுத்திருக்கும் போதோ
கொட்டி வைத்த “வைரங்கள்….!”
கையில் தூக்கும் போது
எந்த மனக்கவலையும்
ஓடிவிடும்…..
தோளில் சாய்க்கும் போது
நெஞ்சத்தில்
அமைதியும் கூடிவிடும்…..
பார்த்துக் கொண்டிருந்தால்
“பசியும் தீர்ந்து” போகும……. கொஞ்சிக்கொண்டிருந்தால்
மணியும்
“நிமிடமாகி போகும்…….”
மண்குடிசையாக இருந்தாலும்
அதை
மாளிகை ஆக்கிவிடும்…..!
ஏழையின்
குடும்பமாக இருந்தாலும மகிழ்ச்சியை ஏராளமாகிவிடும்….!
கைக்குழந்தை
வைத்திருப்பவர்கள்
கோவிலுக்கு
செல்ல வேண்டியதில்லை….
ஏனெனில் ?
தெய்வமே ! அவர்கள் வீட்டில்
இருப்பதால்…..
முகம் என்பது
சூரியகாந்தி பூவில் செய்ததோ ?
பாதம் என்பது
ரோஜா இதழ்களில் செய்ததோ?
கன்னம் என்பது
செவ்வந்தி மலரில் செய்ததோ?
புன்னகை என்பது
மல்லிகை பூக்களில் செய்ததோ?
விரல்கள் என்பது
ஊசி மல்லிகையில் செய்ததோ?
உள்ளங்கை என்பது
கனகாம்பரம் பூவில் செய்ததோ?
கை கால் என்பது
பருத்திப்பூவில் செய்ததோ ?
உதடுகள் என்பது
செம்பருத்திப் பூவில் செய்ததோ?
இதையெல்லாம் ஒன்றாக்கி குழந்தை என்று பிரம்மன் செய்தததோ….?
இச்செல்வத்திற்கு ஈடு
இவ்வுலகில்
எச்செல்வமும் இல்லை….!
இச்செல்வம்
இல்லையென்றால்
எச்செல்வம் இருந்தாலும்
பயனில்லை…….! *கவிதை ரசிகன்*
🪷🥀🪷🥀🪷🥀🪷🥀🪷🥀🪷