வியப்பின் உச்சங்கள்..!

பழைய பேப்பர்

நடந்து முடிந்த
நிகழ்வுகளை…
நாடறியச் செய்து
ஒரு மூலையில்
முடங்கிக் கிடக்கிறது …
பழைய
செய்தித்தாள்கள்…

வியப்பின் உச்சங்கள் …
விந்தை அதிசயங்கள்…
விபத்துகள் ,
மருத்துவக் குறிப்புகள் …
நடிகர், நடிகையர்
ஒளிப்படங்கள்…
அரசியல் சாதனைகள் ,
புரட்டு உருட்டுக் கள்…
உழல் திருட்டுக்கள்
கொலை ,
கொள்ளைகள்
கற்பழிப்புகள் …
இனக் கலவரங்கள் ,
மதச் சண்டைகள் …
இயற்கைச் சீற்றங்களென …

ஒரு வகையில்
இப்புவியின்
வரவு செலவுக்
கணக்குகள்
அவைகள் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *