இஸ்ரேலுக்கு ஈரான் விதித்த எச்சரிக்கை..!
நிழல் யுத்தத்திலிருந்த இஸ்ரேல் ஈரான் ஆனது நேரடி யுத்தத்தில் களமிறங்கியுள்ளன.
பாலஸ்தீன இஸ்ரேல் போர் ஆனது உக்கிரமாக இடம்பெற்றுவருகிறது.இதற்கு மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.இதே வேளை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈராக்,ஈரான் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் ஆனது அண்மையில் டமாஸ்கஸ்சில் அமைந்திருக்கும் ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியது.இதற்கமைய கடந்த வாரம் ஈரான் ஆனது இஸ்ரேல் மீது 300 ட்ரோன்களை ஏவியது.
இதன்போது 2 விமான தளங்கள் தாக்குதலுக்கு இலக்கானது.இதன் காரணமாக இஸ்ரேலானது ஈரான மீது கடும் கோபததில இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் செயத தவறுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும்,அத்தோடு அது நிறைவடைந்ததாகவும்,மேலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் பட்சத்தில மோசமான பின்விளைவுகளை இஸ்ரேல் சந்திக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேல் ஆனது ஈரான் மீது தாக்குதல் நடந்த ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஈரானின் அணுமின் நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலின் தாக்குதல இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஐ.நா சபையின் அணு சக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரபேல் குரோஷி ,ஈரானின் அணு உலை மீது தாக்குதல் நடத்த வாய்பிருப்பதாகவும்,இது சமபந்தமாக கவலையளிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாக இருப்பினும் பாதிக்கப்படபோவது அப்பாவி பொதுமக்களாகும்.