அதிரடியாக ஆடிய சண் ரைசேர்ஸ் ஹைதராபாத் பெருவெற்றி
IPL தொடரின் இன்றைய 34 ஆவது போட்டியில் அதிரடியாக ஆடிய சண் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்கி கப்பிற்றல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பெரு வெற்றியொன்றைப் பதிவுசெய்துள்ளது.
Arun Jaitley மைதானத்தில் இடம்பெற்ற இந்தப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்கி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஹதராபாத் அணி ஆரம்பத்தில் மிக வேகமாக ஓட்டங்களைக்குவித்தது.
ஆரம்ப வீரர்களான ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் ஆடிய அதிரடி ஆட்டத்தில் முதல் ஐந்து ஓவர்களிலேயே 100 ஓட்டங்களை குவித்திருந்தார்கள்.
இதில் ஹெட் 32 பந்துகளில் 89 ஓட்டங்களையும் அபிஷேக் 12 பந்துகளில் 46 ஓட்டங்களையும் எடுத்திருந்தார்கள்.
அதன்படி ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை குவித்திருந்தது.
தொடர்ந்து களமிறங்கிய டெல்கி அணி ஆரம்ப விக்கெட்டுக்களை விரைவில் இழந்தது. இருப்பினும் மத்திய வரிசை வீரர்களான J. Fraser-McGurk மற்றும் A. Porel மிகவும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தனர்.
Fraser 18 பந்துகளில் எடுத்த 65 ஓட்டங்கள் மற்றும் Porel 22 பந்துகளில் எடுத்த 42 இரண்டு ஓட்டங்கள் அணித்தலைவர் Pant 35 பந்துகளில் அடித்த 44 ஓட்டங்கள் ஆகக்கூடிய ஓட்டங்கள் ஆகும்.
அதன்படி டெல்கி அணி 19 .1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. தமிழகத்தின் நடராஜன் நான்கு விக்கெட்டுக்களை எடுத்து டெல்லிக்கு சவாலான பந்து வீச்சாளராக இருந்திருந்தார்.
நிறைவில் ஹைதராபாத் அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற ஆட்ட நாயகனாக அதிரடி ஆட்ட வீரர்களான ட்ராவிஸ் ஹெட் தெரிவானார்.
இன்றைய அபார வெற்றியைத்தொடர்ந்து சண் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி , அணித்தர வரிசையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளை பின் தள்ளிவிட்டு இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.