நாணயம்..!
காட்சியும் நானே கவிதையும் நானே
ஒரு காலத்தில்
நாணயங்கள்(காசு)
அதிகமாக இருந்தது.
மனிதர்களிடம்
நாணயமும் (குணம்)
நிறைந்திருந்தது.
இக்காலத்தில்..
சில்லரைகள் நோட்டாகி..
‘சில்லரை’களாய் (குணம்)
வலம் வருகிறார்கள்…
நாணமில்லா நயவஞ்சகர்களுக்கு
மத்தியில்
ஞானமுள்ளவர்களை காணவில்லை!
இங்கு
நா.. நயம் கொண்டு வாழ்வோரே..
இருந்து போகின்றனர்! *வீரா*