அதிரடியாக வென்ற Royal challengers Bengaluru
IPL போட்டிகளின் இன்றைய முதலாவது போட்டியில் Royal Challengers அணி மிக அதிரடியாக ஆடி 24 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட்டுக்களால் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப்போட்டி IPL போட்டித்தொடரின் 45 ஆவது போட்டியாக Gujarat Titans அணியை Royal challengers Bengaluru அணி எதிர்த்தாடியது .
ஆட்டத்தின் ஆரம்பத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சலெஞ்சேர்ஸ் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடத் துவங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தில் ஆகக்கூடிய ஓட்டமாக சாய் சுதர்சன்- Sai Sudharsan ,49 பந்துகளில் 84 ஓட்டங்களை குவித்திருந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ரோயல் சலஞ்சேர்ஸ் அணி, 16 ஓவர்களில் 206 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது.
ஆட்டத்தில் அதிரடியாக, Will Jacks, 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப்பெற்றிருந்தார்.
அதனடிப்படையில் ஆட்ட நாயகனாகவும் Will Jacks அறிவிக்கப்பட்டார்.
அணித்தர வரிசையில் 10 ஆவது இடத்திலேயே நிற்கும் ரோயல் சலஞ்சேர்ஸ் அணி அடுத்தடுத்து வரும் வெற்றிகளால் இனி முன்னுக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பை கிரிக்கெட் அவதானிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.