காஸாவிற்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல்..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலிற்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுகளும் பாலஸ்தீனத்திற்கு ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளும் பல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்காகி பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் இஸ்ரேலானது மருத்துவம்,உணவு, நீர்,மின்சாரம் என பல அத்தியவசிய சேவைகளை தடுத்துள்ளது. இதன் காரணமாக பலர் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில காஸா பகுதிக்கு அத்தியவசிய உதவிகளை கொண்டும் செல்லும் கெரெம் ஷெலோம் எல்லைப்பகுதியை அண்மையில் மூடியிருந்தது. இந்நிலையில் ஐ.நா.மற்றும பல அமைப்புகள் கவலை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மனிதபிமான உதவிகளை மேற்கொள்ள மீண்டும் இந்த எல்லையை இஸ்ரேல் திறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.