இதய அறை..!

வீடு பேசுகிறேன்…. ஆக்கம் : *கலைவாணி*

ஒருவன்
ஏழையா?
பணக்காரனா? என்று
என்னைப் பார்த்து தான்
தெரிந்து கொள்கிறார்கள்….

தனிக்குடும்பமாக
இருந்தால்
மாளிகை கூட
குடிசை வீடு தான்…
கூட்டுகுடும்பமாக
இருந்தால்
குடிசைக் கூட
மாளிகை தான்…

என்னை உயர்த்தி
செல்வதால்
எந்த பயனும் இல்லை
நீ உயர்ந்து செல்….

நீங்கள் மட்டும்
அலங்கரித்துக்
கொள்கிறீர்கள்
என்னை ஏன்
செடி கொடி
மரங்கள் வைத்து
அழகு படுத்துவது இல்லை?

உன்னை
உன் பெற்றவள்
பத்து மாதம் தான்
கருவறையில்
சுமக்கிறாள்…
நானோ
உன்னை
ஆயுள் முழுக்க
எனது இதய அறையில்
சுமக்கிறேன்…. - *கலைவாணி*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *