இங்கு நீங்கள் சென்றதுண்டா…?

🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕

சமையல் அறை
அம்மாவின்
அலுவலக அறை

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕

அம்மாவின்
அலுவலகம்….
அப்பா பிள்ளைகளின்
உணவகம்…

பெயர் பலகை
வைக்காத
சித்த வைத்தியசாலை….

அம்மாவின்
சிறுசேமிப்பு வங்கி…

அம்மா
தன் அழுகையையும்
கண்ணீர் துளிகளையும்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கும்
ரகசிய அறை…..

அம்மாவின்
இன்பத் துன்பங்களில்
அதிகம்
பங்கெடுத்துக் கொண்டது
கணவர்
பிள்ளைகளை விட
சமையலறையாக தான்
இருக்கும்…..!!!

அம்மாவுக்கும்
சமையலறைக்கும்
தொப்புள் கொடி
அடையாளம் இல்லாத
ஒரு இரத்தப் பந்தம்
இருக்கத்தான் செய்கிறது…
இல்லையெனில்
சமையலறைக்குள்
சென்றவுடன் வீசுமா
அம்மாவின் வாசம்…?

பிள்ளைகளுக்கு
கடவுச்சொல் இல்லாமல்
காசு கொடுக்கும்
ஏ டி எம் இயந்திரம்….!

அம்மா
வீட்டில் இல்லாத
நாட்களில்
சமைத்த உணவில்
சுவை மட்டுமல்ல
சமையல் அறை கூட
சுகம் இல்லாமல் தான்
இருக்கும்…..!

சிலை இல்லாத
இன்னொரு கோவில் தான்
சமையலறை அம்மாவிற்கு….!

சொர்க்கம் போன்ற
இடமாக இருந்தாலும்
கண்டு களித்தவுடன்
சலிப்பு வந்துவிடும்….
அம்மா கடைசி வரை சமையலறையை
ரசிப்பது தான்
கடவுள் படைப்பில்
இன்னொரு அதிசயம்….!!

மனதில் மட்டும்
இன்றுவரை
ஒரு கேள்வி
உறுத்திக் கொண்டே !
இருக்கிறது
அம்மா ……!
அப்பாவோடு
அதிக நாள்
வாழ்ந்தாரா?
சமையலறையோடு
வாழ்ந்தாரா? என்று….!!! *கவிதை ரசிகன்*

🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *