அடர்ந்த காட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ள சிறுவன்
ஹம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனத்தில் ஊரனிய பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த போது, 12 வயது சிறுவன், பூந்தல தேசிய வனத்தின் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.
பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் சிறுவனை ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுவன் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் சிறுவன் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும், வனப்பகுதிக்குள் சிறுவன் எவ்வாறு சென்றார் என்பது குறித்த தகவலும் இதுவரை அறியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனிடம் விசாரித்த போது பெலியத்த பகுதியில் வசிப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த வனம் பெலியத்த பகுதியிலிருந்து 70 கிலோமீட்டருக்கும் அதிகளவான தொலைவில் இருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.