16 வயது சிறுமி ஒருவர் மாயம்
16 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கந்தேனுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் காணால் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
சிறுமியைக் காணவில்லை என்று அவரது பாட்டியே முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன சிறுமி சுமார் 5 அடி உயரம், நீண்ட கூந்தல் மற்றும் மெல்லிய உடலமைப்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக அவர் கிரீம் நிற காற்சட்டை மற்றும் கருப்பு பூக்கள் கொண்ட வெள்ளை டி-செட்டும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இடம்கெதராவை தருஷி சம்பிகா என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.
அந்த சிறுமி, இலக்கம் 85, கந்தேனுவர, அல்வத்தையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன சிறுமியைப் பற்றிய மேலதிக தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பொறுப்பதிகாரி கந்தேனுவர:- 071 – 8592943 கந்தேனுவர பொலிஸ் நிலையம்:- 066-3060954