நாமல் ராஜபக்ஷ CID இல் முன்னிலை டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது என்பது தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை பிணையில் விடுவிக்க கடந்த 04ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
காலை CID இல் முன்னிலையான நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் அளித்தபின் அங்கிருந்து வெளியேறினார்…