“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து குறித்து குழு நியமிப்பு – பிரதமர்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது ; பிரதமர்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.