நிக்கலொஸின் செயலாள் ரசிகர்கள் மகிழ்ச்சி
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் நிக்கலொஸ் பூரன் அடித்த சிக்ஸ்ர் ஒன்று ரசிகர் ஒருவரின் தலையில் பட்ட நிலையில் குறித்த ரசிகர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.இதனையடுத்து குறித்த ரசிகர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த ரசிகரை நிக்கலொஸ் பூரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.மேலும் தம்முடைய தொப்பியை கழற்றி வாழ்த்துச் செய்தியுடன் கையொப்பமிட்டு அந்த ரசிகருக்கு பரிசாக வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளார்.அதை வாங்கி கொண்ட ரசிகர் நன்றி தெரிவித்துள்ளார். நிக்கலொஸ் பூரனின் இந்த செயல் அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.