மன்னிப்பு

உன் மதிப்பு என்ன ஆவது??….இதெல்லாம் எல்லோருக்கும் நடப்பதுதான்….லேசா விடு…மூளை கூறினாலும், ச்சே எப்படி இப்படி ஒரு தவறு பண்ணிட்டேன் என புத்தி தன்னைத்தானே
சாடினாலும்….
இல்லை இல்லை என் தவறுக்கு மன்னிப்பு கேட்டே ஆகனும்…..உள்ளே ஏதோ ஒன்று வற்புறுத்தியது….

அது திருவள்ளுவரோ,பாரதியோ,விவேகாநந்தரோ….அல்லது வேதாத்ரி மகரிஷியோ…..ஏதோ ஒர் வாழ்வியல் விழுமியம்…..
செல் போனை எடுத்தேன்….பரமகுரு என்ற அந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கு போன் செய்தேன்…..போனை எடுத்த அவன்….ஹலோ மிஸ்…good evening miss என்றான்…

தம்பி வகுப்பில் இன்று உன் தேர்வு தாளை நான் திருத்தி தந்த போது நான் தவறு என்று போட்டிருந்த அந்த ஒரு மதிப்பெண் விடை….நீ கூறியது போல சரியான விடைதான் ப்பா….இப்போது வீட்டிற்கு வந்து பாட நூலை பார்த்த போதுதான் தவறு என்னுடையது என்பது புரிந்தது….சாரி நாளை பள்ளி வந்து உனக்கு ஒருமதிப்பெண் வழங்கி விடுகிறேன் என்றேன்….

Thank you miss என்றான்….பிறகுதான் எனக்கு நிம்மதி உண்டாயிற்று……

அவன் சரி என்று மூளையில் பதித்திருந்த விடையை என் கவனமின்மையால் தவறு என்று பதித்து விட்டால்….
அது என் கற்பித்தல் பணிக்கு இழுக்கு….அதைவிட அம் மாணவனிடம் மன்னிப்பு கேட்டு அவனின் விடை சரி என்று சொல்லி விடுவது சாலச்சிறந்த தாகப்பட்டது……
கவனம் என்பது ஒவ்வோர் இணுக்கிலும் தேவைப்படுகிறது…..

எழுதுவது – தர்சிணிமாயா