மழைக்கால நண்பன்

கொட்டும் மழையில்
குடை பிடித்து
எட்டி நடை போடும்
அழகென்னவோ
தனி சுகம் தான் …!

வான் மேகம் திரண்டெழுந்து
மண் மீது முத்தமிட்டு
சில்லென்று காற்றினிடை
சன்னமாய் தூறலது
விழுந்த போது

மண் வாசம்
மண மணக்க
மழை நீரில்
மணம் மயங்க

குடையொன்றை பிடித்த பிடி
நடை பயில
ஏங்காத
மனமிங்கேது முண்டோ ?

மழைக்கால
குடை நண்பா!
மழையென்றால்
நினைவில் நிற்பது
நீ தானே ?

ஆபத்தில் காத்து நிற்கும்
ஆருயிர் நண்பனை போல்
மழைக்கால பயணமதில்
உடனிருந்து உதவுகிற

குடை நண்பா!
மழைக்கால
கொடை நண்பா !
நீ தானே
எங்கள் காவலன்!
நீ தானே
மழைதனை தொட்டணைக்கும்
மகத்தான காதலன் !

எழுதுவது : கவிச்செம்மல் பி.ஆரோக்கிய செல்வி ,
கடலூர் .