இயற்கையோடு மனிதன்!

கதிரவன் உதிக்கும் நேரம்
மலர்கள் மலரும் தருணம்
தேனீ தேனெடுத்து வாழும்
இதுவே இயற்கையின் வர்ணஜாலம்!

உயரிய மரக் கிளை
குயில் இசைப் பாட
கிளி கொய்யாவை உண்ண
விலங்குகள் இரையைத் தேட…

ஆற்றங் கரை ஓரத்தில்
மெல்லிய காற்று வீச
மீன்கள் துள்ளி குதிக்க
அன்னம் நீந்தி மகிழ!

மரக்கொத்தியின் ஒளி ஒளிர
மரத்தின் கிளைகள் ஆட்டமிட
வணத்துப்பூச்சிகள் ஆரவாரமாய் பறக்க
மயில் அழகாய் நடனமாட…..

இயற்கையின் பிடியில் இத்தனை அம்சங்கள்! இதுவே பல உயிரினங்களின் வம்சங்கள்!!

மனிதா உன் பேராசையால்
மரத்தை அழித்தாய் தேவைக்காக
நெகிழியை அதிக பயன்படுத்தி
மழையை பெறாமல் தவிர்த்து….

பசியில் பாதிக்கும் ஏழைகள்
அருவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
விலங்குகளின் இருப்பிடத்தை அழித்து
மரங்களை காணவே அரிதாகயிருக்கிறது…

மரத்தை நடுவோம்
நெகிழியை தவிர்ப்போம்
மழையை பெறுவோம்
உயிரினங்களை வாழவைப்போம்

 எழுதுவது : சு.அ.யாழினி
     ஒன்பதாம் வகுப்பு
                திருச்சி