பழந்தமிழ் பசுமையானது

தமிழுக்கும் பெயருண்டு
தெய்வத் தமிழுக்கும் துணை உண்டு

செந்தமிழ் இயல்பானது
முத்தமிழ் சொத்தானது

கன்னித் தமிழ்
பிறமொழி கலவாதது
தென் தமிழ்
ஆற்றல் மிகுதியானது

தேன் தமிழ்
தித்திப்பானது
பழந்தமிழ் பண்பானது

ஞானத் தமிழ்
பொக்கிஸமானது
திருநெறிய தமிழ்
அருளானது

அமுதத் தமிழ்
அருஞ் சுவையானது
அருந்தமிழ்
அறும்பானது

தண்டமிழ்
குளிர்ச்சியானது
வண்டமிழ்
வளமானது

ஒண்டமிழ்
அறிவின் சொல்லானது
இசைத் தமிழ்
சங்கீதமானது

தன்னேரிலாத தமிழ்
அலங்காரத் தமிழானது
இயற்றமிழ்
இயல் இசை நாடகமானது

தீந்தமிழ்
தித்திப்பானது
இருந்தமிழ்
தமிழானது

நாடகத் தமிழ்
நளினமானது
பசுந்தமிழ்
பசுமையானது

சொற்றமிழ்
மந்திரமானது
பைந்தமிழ்
பசுமையானது

அன்னைத்தமிழ்
தாய்மொழியானது
தமிழன் உள்ளவரை
உயிர் வாழும் மொழியாக தமிழ் மொழி
காலகாலத்துக்கும் பஞ்சாமிர்தமாக

எழுதுவது : சி.ம.அபிமாலா
மலேசியா