மனிதம் எங்கே?
ஊரார் சொல்லும் சொல்லுக்கும் செவிமடுத்து….!
செவிச்செல்வம் இருக்கிறது என்பதை மறந்து….!
மாய உலகில் தினம் மாறும்,
பச்சோந்திதான் இன்று வாழும் மனிதமே….!
மனிதம் எங்கே? என்று வினவுகிறேன்….!
விடைகள் எல்லாம் மடைகளால் மூடப்பட்டு…!
தண்ணீர் திறந்தால்தானே பயிர் செழிக்கும்…!
வானம் பொழிந்தால்தானே மண் சிறக்கும்…!
நினைத்து பாருங்கள் எல்லாம் நின்றுவிட்டது….!
மழையும் இல்லை வெயிலும் இல்லை….!
காற்றும் இல்லை மின்சாரமும் இல்லை….!
விவசாயமும் இல்லை உணவும் இல்லை….!
என்னவாகும் நம் பாடு,பெரும்பாடு…!
பேதம் பார்த்து மனிதம் பார்க்காதே….!
உதவி செய்ய எப்போதும் தயங்காதே….!
பொறாமை மனதை புறம் தள்ளு….!
போகும் வழியில் மனிதத்தை கொடு….!
மனிதம் உன்னை காக்கும் காலத்தோடு….!
மனசாட்சியின் விளிம்பில் நீ மாறினாலும்,
மாற்றமே உலகில் மாற்றத்தை தருமே…..!
-எழுதுவது : கவிஞர் ந.பா.மேஹவர்ஷினி
புதுக்கோட்டை மாவட்டம்