ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி வெளியிடவிருக்கும் படங்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் பல.
ஜூலை 12 ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் கண்களின் ஊடாகக் காணப்பட்ட விண்வெளிப் படங்கள் முதல் தடவையாக வெளியிடப்படவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. அதி நவீன தொழில் நுட்பங்களைக் கொண்ட விண்வெளி ஆய்வுக் கருவியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிடவிருக்கும் படங்கள் அதி தூரத்திலிருக்கும் விண்வெளி அங்கங்களை இதுவரை கண்டிராத தெளிவுடன் காட்டவிருக்கிறது என்று கூறி நாஸா பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது.
தூரத்திலிருக்கும் நட்சத்திரக் கூட்டங்கள், பிரகாசிக்கும் விண்வெளி மேகக்கூட்டங்கள், தூரத்திலிருக்கும் வாயுகளாலான கிரகங்கள் ஆகியவற்றின் படங்கள் வெளியிடப்படவிருப்பதாகக் கூறி நாஸா அப்படங்களை இரகசியமாகப் பாதுகாத்து வருகிறது. “எங்கள் பிரபஞ்சத்தின் ஆழத்தில் இருப்பவற்றைத் தெளிவாகக் காட்டும் படங்கள் அவை,” என்கிறார் நாஸாவின் தலைவர் பில் நில்சன்.
சாள்ஸ் ஜெ. போமன்