“தாய்வான் தாக்கப்பட்டால் பாதுகாக்க அமெரிக்கா தயார்,” என்கிறார் ஜோ பைடன்.
உக்ரேனை ரஷ்யா தாக்கியபோது போலன்றி தாய்வான் மீது திடீரென்று சீனா தாக்குதலொன்றை நடத்துமானால் பாதுகாப்புக்காக அமெரிக்கா களத்தில் இறங்கும் என்று ஜோ பைடன் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்தார். மே மாதத்தில் அவர் ஜப்பான் போயிருந்தபோதும் நிருபரொருவர் அதே போன்ற கேள்வியை வீசியபோதும் அமெரிக்க ஜனாதிபதி தாம் தாய்வானுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியெடுத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
1979 இல் அமெரிக்கா தனது தாய்வான் உறவு பற்றிய அரசியல் கோட்பாட்டை ஏற்படுத்திக்கொண்டது. அதில் தாய்வானின் பாதுகாப்புக்கு உதவுவதாக அமெரிக்கா குறிப்பிட்ட அதே சமயம் அமெரிக்க இராணுவத்தைப் பாதுகாப்புக்காக அனுப்புவது பற்றி உறுதியளிக்கவில்லை. மே மாதத்தில் ஜோ பைடன் கொடுத்த விபரங்கள் முன்னைய தாய்வான் கொள்கையை மாற்றி இராணுவ உதவியையும் அனுப்பலாம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஜோ பைடன் தொலைபேசிப் பேட்டியில் விபரித்ததன் விளக்கத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகள் “அமெரிக்காவின் முன்னைய தாய்வான் கோட்பாடு” மாறவில்லை என்று தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்