யூடியூப், பேஸ்புக்குக்கு அடுத்ததாக விக்கிபீடியாவும் தேவநிந்தனைகளைக் கொண்டிருப்பதாகப் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டது.
உலகமக்களுக்கெல்லாம் இலவசமாகத் தனது சேவையை வழங்கும் விக்கிபீடியா அகராதியை முடக்கிவிட்டது பாகிஸ்தான். Wikimedia Foundation அமைப்பால் பேணப்படும் விக்கிபீடியாவில் விரும்புகிறவர்கள் எவரும் தமக்குத் தெரிந்த விடயங்களைப் பற்றி எழுதலாம், ஏற்கனவே எழுதப்பட்டிருப்பவைகளைத் திருத்தலாம்.
தேவநிந்தனைகள் பலவற்றை விக்கிபீடியா அகராதி கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவற்றை நீக்கும்படி Wikimedia Foundation இடம் பாகிஸ்தானின் தகவல் அமைச்சு கேட்டுக்கொண்டது. அதற்கு விக்கிப்பீடியாவிடமிருந்து பதிலெதுவும் கிடைக்காததால் அந்தத் தளத்தைப் பாகிஸ்தானில் மூடிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்