பறக்க முடியாத பறவைகள் இலங்கையில்…!
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பல ஆண்டுகளாக நட்புறவு நிலவி வருகிறது. இதன் விளைவாக அந்நாட்டில் இருந்து இலங்கைக்கு விலங்குகள்,பறவைகள் போன்றவற்றை வழங்கிவருகிறது.
அந்த வகையில் இரட்டை வாட்டில்ட் கெசோவரி பறவைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.இதில் ஆண் பறவை இரண்டும்,பெண்பறவை ஒன்றும் காணப்படுகின்றன.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் நட்புறவை மேம்படுத்தும் நோக்குடனும் விலங்குகள் பரிமாற்ற திட்டத்துடனும் இப்பறவைகள் வழங்கப்பட்டுள்ளன.
மலேசிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச் 179 ரக விமானத்தில் இந்த பறவைகள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
இந்த பறவை உலகில் மிக ஆபத்தான பறவை இனங்களில் 2வது இடத்தை வகிக்கும் பறவை இது என்பது குறிப்பிட தக்கது.
இது 5 அடி உயரமும், 60 கிலோகிராம் எடையும் கொண்டதாக வளரக்கூடியது.இந்த பறவைகளால் உயர பறக்கமுடியாது என்பது குறிப்பிடதக்கது.
பல ஆண்டுகளுக்கு முன் முத்து ராஜா என்ற யானையை இலங்கைக்கு தாய்லாந்து வழங்கி அண்மையில் மீண்டும் அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.
இதே வேளை குரங்குகள்,தீக்கோழி,பாம்புகள்,போன்றவற்றை தாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.
தற்போது இந்த பறவைகள் தெஹிவளை மிருககாட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளன.