சவ்ரவ் கங்குலி (தாதா)
நேற்று தலைக்கு பிறந்த தினம் இன்று தாதாவிற்கு பிறந்த தினம் …தாதா என்று சிறப்பித்து குறிப்பிடப்படும்(sourav ganguly) சவ்ரவ் கங்குலியின் பிறந்த தினம் இன்று.
1972ம் ஆண்டு ஜூலை 08 ம் திகதி சவ்ரவ் கங்குலி பிறந்தார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை தன்வசம் வைத்திருப்பவர் சவ்ரவ் கங்குலியாவார்.
இவர் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த துடுப்பாட வீரரும் ஆவார்.வலது புறத்தின் கடவுள் என சிறப்பித்து குறிப்பிடப்படும் சவ்ரவ் கங்குலி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.கங்குலியின் மூத்த சகோதரரான சினே ஹாசிஷால் ஆல் துடுப்பாட்ட உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.10.000 ம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கார்,இன்சமாம் ஹுல்லாக் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 3ம இடத்தில் காணப்படுகிறார்.
இலங்கை,பகிஸ்தான்,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்து ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றுள்ளார்.1999ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் 318 ஓட்டங்களை இவரும் ராகுல் ட்ராவிட்டும் இணைந்து பெற்றமை இன்றளவிலும் சிறப்பாக பேசப்படுகிறது.இச்சாதனை இது வரையிலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இவருக்கு 2004 ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் இந்தியன் ப்ரிமியர் லீக் தொழிநுட்பக் குழுவின் உறுப்பினராகவும்,இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளை நிர்வகிக்கும் நான்கு பேர் கொண்ட குழுவில் இவரும் ஒருவராகவும் திகழ்கிறார்.இதே வேளை கல்கத்தா நைட்ரைடர்ஸ்,
நோர்தாம்ப்டன்சயர்
புனேவாரியஸ் இந்தியா போன்ற அணிகளிலும் விளையாடி உள்ளமை குறிப்பிட தக்கது.